மனைவியின் மார்பிங் படத்தை வெளியிட்ட நிறுவனம் - விபரீத முடிவெடுத்த கணவர்

Andhra Pradesh Money Death
By Karthikraja Dec 11, 2024 04:30 PM GMT
Report

கடன் செயலி நிறுவனம் மனைவியின் மார்பிங் படத்தை வெளியிட்டதால் கணவர் விபரீத முடிவெடுத்துள்ளார்.

கடன் செயலிகள்

கடன் செயலிகள் மூலம் கடன் பெரும் போது மிக அதிகமான தொகையை திருப்பியளிக்க அந்த நிறுவனங்கள் நிர்பந்திக்கின்றன.

instant loan app not safe

செலுத்த தாமதிக்கும் போது அவரது போன் காண்டாக்ட்டில் உள்ள மற்றவர்களுக்கு புகைப்படங்களை அனுப்பி தொல்லை அளிப்பது போன்ற மனிதாபிமானற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ.2000 கடன்

இதே போல், ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினம் நகரைச் சேர்ந்தவர் நரேந்திரா (27) மீன்பிடி தொழில் செய்து வருகிறார். கடந்த அக்டோபர் 20ஆம் தேதிதான் நரேந்திராவிற்கு திருமணம் நடைபெற்றது. 

2 மாத காலமாக மோசமான வானிலை காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாத நிலையில், வருமானம் இல்லாததால் கடன் செயலி மூலம் ரூ.2000 கடன் பெற்றுள்ளார்.

மனைவியின் மார்பிங் படம்

வட்டியுடன் வாங்கிய கடனை விட அதிகமான தொகையை செலுத்தியுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் கூடுதலாக பணம் செலுத்த நரேந்திராவை நிர்பந்தித்துள்ளனர். அவர் தராத நிலையில் அவரது மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவர்களது ஆபாசப் புகைப்படங்களை நரேந்திராவினுடைய காண்டாக்ட்டில் உள்ள அவரின் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர். 

loan app

இதனால் மன அழுத்தத்தில் இருந்த நரேந்திரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல் ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் நரேந்திராவின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050.