அரசு பள்ளிகளில் பாலியல் அத்துமீறல்கள் நடக்கத்தான் செய்கிறது- பாஜக தலைவர் எல்.முருகன்
பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் பிஎஸ்பிபி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுவதில் எந்த நியாயமில்லை என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
பாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி சென்னை அமைந்தகரையில் தமிழக பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், கடந்த 7 வருடமாக பிரதமர் மோடி சிறந்த ஆட்சியை நடத்தி வருவதாகவும் பல்வேறு மக்கள் நலன் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். அப்போது பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த எல்.முருகன், பாலியல் அத்துமீறல் தொடர்பாக யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றும், இந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுவதில் என்ன நியாயம் இல்லை என கூறினார்.
இதுபோன்று அரசுப் பள்ளிகளிலும் தவறு நடந்துள்ளது.அதற்கு, கல்வித்துறை அமைச்சர் பொறுப்பேற்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.