அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா பாஜக? - எல்.முருகன் பதிலால் குழப்பம்
அரசியல் லாபத்துக்காக மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடக்கூடாது என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக செயற்குழுவில் நீட் தேர்வுக்கு எதிராக திராவிட கட்சிகள் மக்களை குழப்புவதாக நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பாஜக கூட்டணி கட்சியான அதிமுகவை விமர்சிப்பது போல் அமைந்தது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் இந்த கூட்டணி நீடிக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி பற்றி முடிவெடுப்போம் என தெரிவித்துள்ளார்.
மேலும் நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தாமல் அவர்களின் மன உறுதியை குலைக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது எனவும் எல்.முருகன் கூறியுள்ளார்.