ஆளுநர் உரை ஸ்டாலின் புகழ் பாடும் உரையாக உள்ளது: எல்.முருகன் குற்றச்சாட்டு

L murugan Tn assembly Bjp
By Petchi Avudaiappan Jun 22, 2021 02:07 PM GMT
Report

 தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மு.க.ஸ்டாலின் புகழ் பாடும் உரையாகவ உள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே வையாவூர் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில் காஞ்சிபுரம் பாஜக கட்சியின் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் சார்பில் 300க்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 கிலோ அரிசி மூட்டை, காய்கறி, மளிகை பொருள் உடன் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆளுநர் உரை ஸ்டாலின் புகழ் பாடும் உரையாக உள்ளது: எல்.முருகன் குற்றச்சாட்டு | Lmurugan Alleged To Governor Speech

இதில் தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டு முன் களப்பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன், தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரை மு.க.ஸ்டாலின் புகழ் பாடும் உரை ஆகவே உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இல்லை என்பது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் கொடுத்துள்ளது என்றும், நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தும் திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மாணவர் மத்தியிலேயே மாணவர்களின் மன உறுதிகளை கொலைக்கும் செயலை செய்து கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.