திமுக இரட்டை வேடம் போடுகிறது: எல்.முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு
டாஸ்மாக்கை மூடுவது தொடர்பான கருத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், நாளை முதல் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், சென்னை தி.நகரில் டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் எல்.முருகன், டாஸ்மாக் கடை திறப்பதில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடும், தற்போது ஒரு நிலைப்பாடும் என்று திமுக இரட்டை வேடம் போடுகிறது என குற்றம் சாட்டினார்.