எல்கேஜி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - டிரைவரை புரட்டி எடுத்த பெற்றோர்!
4 வயது எல்கேஜி சிறுமிக்கு பள்ளி முதல்வரின் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
ஹைதராபாத், பஞ்சாரா கில்ஸ் பகுதியில் நர்சரி பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளி முதல்வரின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ரஜினி குமார். இந்நிலையில் அதே பள்ளியில் எல்கேஜி படிக்கும் சிறுமி ஒருவரின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த பெற்றோர்,

அந்த சிறுமையை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது டிரைவர் ரஜினி குமார் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
டிரைவருக்கு தர்மஅடி
அதனைத் தொடர்ந்து, பெற்றோர் டிரைவரி சரமாரியாக அடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அதனையடுத்து அவர் போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மேலும், பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.