சுண்டலில் வெந்து இறந்து கிடந்த பல்லி... சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி, மயக்கம்... - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை எர்ணாவூர் பாரதியார் நகரை சேர்ந்த ஆரோக்கியராஜ் (35). இவருடைய மனைவி வேளாங்கண்ணி.
இவர்களுக்கு டெய்சி (10), மரியா நான்சி (8) என்ற பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் குடும்பத்துடன் இன்று ராயபுரத்தில் உள்ள எம்.சி.ரோடு ஜவுக்கடைக்கு சென்றனர். அங்கு ‘கிங் 5 ஸ்டார்’ என்ற டீ கடையில் குடும்பத்துடன் சென்று சுண்டல் வாங்கி சாப்பிட்டிருக்கின்றனர்.
சுண்டல் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, மரியா நான்சி சாப்பிட்ட சுண்டலில் இறந்துபோன பல்லி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். உடனே பெற்றோரிடம் சுண்டலில் பல்லி கிடந்ததைக் காட்டினாள்.
இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட 3 பேரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.