மட்டன் பிரியாணியில் கிடந்த பல்லி - அதிர்ச்சியில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர்
சென்னையில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் வாடிக்கையாளருக்கு பரிமாறப்பட்ட பிரியாணியில் பல்லி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள டெக்கான் என்ற பிரபல தனியார் உணவகத்தில் அப்பாஸ் என்பவர் நேற்று முன்தினம் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.பின் உணவக ஊழியர்கள் பறிமாறிய மட்டன் பிரியாணியை சுவைத்து சாப்பிட்டுள்ளார்.
அப்போது அப்பாஸ் பிரியாணியில் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனைட்யாக ஹோட்டல் ஊழியர்களிடம் இதுகுறித்து முறையிட்டார். அதற்கு உணவக ஊழியர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் அருகில் தான் மருத்துவமனை உள்ளது நீங்கள் அங்கே சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இதனால் அப்பாஸ் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்ப்க்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.