ஐஸ்கிரீமுக்குள் பாதியாக செத்து கிடந்த பல்லி - பதறிப்போன வாடிக்கையாளர்!
பிறபலமான கடையில் ஐஸ்கிரீமுக்குள் பல்லி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்கிரீம் கடை
திருச்சி மாவட்டம், தெப்பக்குளம் மெயின் கார்ட் கேட் அருகே மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடை, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வருகிறது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று இளம் ஜோடி ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெரி ஃலேவர் ஆர்டர் செய்துள்ளனர், அப்பொழுது அங்கு டேபிளுக்கு வந்த ஐஸ்கிரீமில் பாதி பல்லி கிடந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அதனை போட்டோ மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளனர். அதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அதிகாரிகள் சோதனை
இந்நிலையில், அந்த கடை ஊழியர்கள் அதிகரிக்க வருவதற்குள் அந்த ஐஸ்கிரீமை மொத்தமாக சாக்கடையில் கொட்டிவிட்டனர். பின்னர், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையிலான அதிகாரிகள் வந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அந்த ஐஸ்கிரீம் கடை பிரிட்ஜ் சுகாதாரமற்ற முறையிலும், சுத்தம் செய்யாததால் துர்நாற்றம் வீசும் வகையிலும் இருந்திருக்கிறது. மேலும், பல்லி கிடந்ததையும் உறுதி செய்து, அந்த பகுதி சிசிடிவி காட்சிகளில் ஊழியர்கள் சாக்கடையில் கொட்டுவதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து, அந்த கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.