இந்த ஒரு உறுதிமொழிதான்... பிரிட்டன் பிரதமாகிறார் லிஸ் டிரஸ்?

London Liz Truss Rishi Sunak
By Sumathi Sep 03, 2022 06:18 AM GMT
Report

 பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். சொந்தக் கட்சிக்குள்ளயே எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த ஒரு உறுதிமொழிதான்... பிரிட்டன் பிரதமாகிறார் லிஸ் டிரஸ்? | Liz Truss Set To Become United Kingdom Pm

பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

லிஸ் டிரஸ்

இந்தத் தேர்தலில், பலர் போட்டியிட்ட நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் ஆகியோர் இறுதி கட்டத்திற்குச் சென்றனர். அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில், லிஸ் டிரஸூக்கு ஆதரவு பெருகி கொண்டே சென்றது.

இந்த ஒரு உறுதிமொழிதான்... பிரிட்டன் பிரதமாகிறார் லிஸ் டிரஸ்? | Liz Truss Set To Become United Kingdom Pm

இதற்கிடையே, பிரட்டன் பிரதமர் தேர்தலில் தனக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக, வெளிப்படையாக, ரிஷி சுனக்கே தெரிவித்தார். வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இதில், கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானோர், லிஸ் டிரஸூக்கு வாக்கு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வரும் 5 ஆம் தேதி பிரிட்டன் பிரதமர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. வரிக்குறைப்பை மையப்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட லிஸ் டிரஸுக்குதான் ஆதரவு அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த பொதுத் தேர்தல் 2025ஆம் ஆண்டு நடைபெறும்.