கடும் பொருளாதார நெருக்கடி -பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா!

Prime minister United Kingdom Liz Truss
By Sumathi Oct 20, 2022 01:05 PM GMT
Report

பொருளாதார நெருக்கடியால் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

லிஸ் டிரஸ்

ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்றதைத் தொடர்ந்து புதிய அரசின் இடைக்கால பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல வரிச் சலுகைகள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன.

கடும் பொருளாதார நெருக்கடி -பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா! | Liz Truss Resigns Uk Prime Minister

ஆனால், அமெரிக்க டாலருக்கு எதிரான பிரிட்டனின் கரன்சியான பவுண்டு கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால், பிரிட்டனில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனால் லிஸ் டிரஸ் கடும் நெருக்கடியைச் சந்தித்து வந்தார்.

ராஜினாமா

மேலும், இந்திய வம்சாவளி பெண் மந்திரி பிரேவர்மென்னை தொடர்ந்து, முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியுள்ளனர். இந்நிலையில், பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமாவை அறிவித்த பிரதமர்,

“கன்சர்வேடிவ் கட்சியால் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையை என்னால் வழங்க முடியாது என்பதை நான் அங்கீகரிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, அடுத்த வாரத்திற்குள் இங்கிலாந்தின் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.