லிவ்-இன்: திருமணத்திற்கு கட்டாயப்படுத்திய காதலிக்கு நேர்ந்த கொடுமை - காதலன் வெறிச்செயல்
திருமணத்திற்கு கட்டாயப்படுத்திய காதலியை, காதலன கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
லிவ்-இன்
டெல்லியில் உள்ள கரவால் நகர் பகுதியில் ஒரு பள்ளி அருகே அடையாளம் தெரியாத பெண் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
தொடர்ந்து விசாரணையில், உத்தரகாண்ட் மிராஜ் பூரை சேர்ந்த ரோகினா நாஸ் என்ற மஹி(25). வினித் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும், லிவ்-இன் ரிலேசன்ஷிப்பில் இருந்துள்ளது தெரியவந்தது. மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று ஒரு மோட்டார் சைக்கிளில் வினித்,
காதலி கொலை
அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து ரோகினா உடலை எடுத்து சென்று சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் குப்பை கொட்டும் இடத்தில் வீசி சென்றுள்ளனர். இதற்கிடையில், வினித்தின் நண்பர் பாருல் என்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
அப்போது, ரோகினா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வினித்திடம் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு வினித்தின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரத்தில் வினித், ரோகினாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன்பின் உடலை அப்புறபப்டுத்த நண்பர் உதவியுள்ளார். மேலும் கொலைக்கு பின்னர் தாங்கள் தங்கியிருந்த வீட்டை விற்றுவிட்டு வேறு ஒரு வீட்டிற்கு வாடகைக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் தலைமறைவாகவுள்ள கொலை செய்தவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.