மகனுக்கு கல்லீரல் கொடுத்த தந்தை - ஒரே நேரத்தில் இருவரும் பலி!
கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையில், தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
கல்லீரல் பாதிப்பு
கேரளா, கலுர் பகுதியை சேர்ந்தவர் நசீர். இவரது மகன் தோயிப் நசீர்(26). இருவரும் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மகனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, மகனுக்கு கல்லீரல் தானம் வழங்க தந்தை முன்வந்திள்ளார். தொடர்ந்து இருவரும் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தந்தை, மகன் பலி
இதனையடுத்து தந்தையின் கல்லீரலில் இருந்து ஒரு பகுதி அகற்றப்பட்டு, மகனுக்கு பொருத்தப்பட்டது. உடனே, நசீரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சையின் போது இதயத்துக்கு செல்லக் கூடிய முக்கிய நரம்பு சேதமடைந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தந்தை இறப்புக்கு பின், மகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவரும் உயிரிழந்தார்.