லிவ்-இன் உறவு வேண்டாம்; பீஸ் பீஸா வெட்டிருவாங்க - ஆளுநர் எச்சரிக்கை!

Uttar Pradesh Relationship
By Sumathi Oct 11, 2025 09:25 AM GMT
Report

லிவ்-இன் உறவுகளுக்கு எதிராக பெண்களுக்கு ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லிவ்-இன் 

உத்தரப் பிரதேச மாநிலம் பாலியாவில் உள்ள ஜனநாயக் சந்திரசேகர் பல்கலைக்கழகத்தின் 7வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

livein relationship

இந்த நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து பேசிய அவர், “எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு மகள்கள் கவனமாக சிந்திக்க வேண்டும்.

லிவ்-இன் உறவுகளில் இருந்தும், சுரண்டல்களுக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். நமது மகள்களுக்கு சொல்ல ஒரே ஒரு செய்தி உள்ளது. லிவ்-இன் உறவுகள் இப்போது பிரபலமாக இருக்கலாம். ஆனால் அதைச் செய்யாதீர்கள்.

கணவன் முகற்றில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பெண் - அதிரவைக்கும் சம்பவம்!

கணவன் முகற்றில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பெண் - அதிரவைக்கும் சம்பவம்!

ஆளுநர் எச்சரிக்கை

உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்களே முடிவுகளை எடுங்கள். என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், நீங்கள் 50 துண்டுகளாகக் காணப்படுவீர்கள். கடந்த 10 நாட்களில் இதுபோன்ற வழக்குகளை பற்றிய அறிக்கைகளைப் பெற்று வருகிறேன்.

Governor Anandiben Patel

அவற்றை நான் பார்க்கும் ஒவ்வொரு முறையும், நமது மகள்கள் ஏன் இதை தேர்வு செய்கிறார்கள் என்று யோசிப்பது எனக்கு வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமிகளை நேரில் சந்தித்தேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சோகமான மற்றும் தனித்துவமான கதை இருக்கிறது.

ஒரு நீதிபதியுடனான சந்திப்பின் போது அவரும் பெண்கள் மீது அக்கறை கொண்டு பேசினார். லிவ்-இன் உறவுகளுக்கு இரையாகாமல் தடுக்க மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அனைத்து பல்கலைக்கழகங்களையும் வலியுறுத்தினார்” என்று தெரிவித்தார். தற்போது, லிவ்-இன் உறவு குறித்து இவர் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது.