நாளை முதல் +2 படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் 12ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்பு நடைபெற இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
அதனால் அவர்களுக்கு வகுப்புகளும் நடைபெறவில்லை. ஆனால் பொதுத்தேர்வு இருப்பதால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடைபெற்று, தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.

அதனையடுத்து, மே மாதம் 3ம் தேதி +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. இதனிடையே கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்குறியாகியுள்ளது.
ஆனால் வைரஸ் பாதிப்பு இருந்தாலும் கூட நாளை முதல் +2 வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் +2 மாணவர்களுக்கான வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.