வேலியே பயிரை மேய்ந்தது; புகார் அளிக்க சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய காவலர்
கர்நாடகாவின் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் வசிக்கும் சிறுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கடபா காவல் நிலையத்திற்கு பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க சென்றுள்ளார்.
இதன்பின்னர், அந்த காவல் நிலையத்தின் கான்ஸ்டபிள் சிறுமியின் வீட்டுக்கு செல்ல தொடங்கியுள்ளார். இதன்பின்னர் அந்த சிறுமியை கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
சிறுமியை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் உறுதி அளித்துள்ளார். எனினும், சிறுமி கர்ப்பமடைந்த பின்னரே இதுபற்றிய தகவல் தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து சிறுமியின் தந்தை, கான்ஸ்டபிளிடம் தனது மகனை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
போலீசாரிடம் அளித்த புகாரை தொடர்ந்து கான்ஸ்டபிளை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என போலீஸ் சூப்பிரெண்டு சோனவானே ரிஷிகேஷ் பகவான் தெரிவித்து உள்ளார்.