பிறந்த சில மணிநேரங்களேயான குழந்தையை பைக்குள் போட்டுச் சென்ற பெண்

By Fathima Dec 14, 2021 11:23 AM GMT
Report

திருச்சி மாவட்டம் முசிறி அரசு மருத்துவமனையில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை கட்டப்பைக்குள் போட்டு, கழிவுநீர் தொட்டிக்கு மேலே வைத்துச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

மருத்துவமனை வளாகத்தின் பின்புறமுள்ள கழிவுநீர் தொட்டிக்கு மேலே இருந்த கடப்பைக்குள் அசைவு தென்படவே, அவ்வழியாக சென்ற ஊழியர் பையை திறந்து பார்த்தபோது அதில் பச்சிளம் பெண் குழந்தை இருந்துள்ளது.

குழந்தையை மீட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், மருத்துவமனையில் இருந்தவர்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குழந்தையை விட்டுச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.