‘கச்சா பாதாம்’ பாடலுக்கு சிறுமியின் க்யூட் நடனம் ! வைரல் வீடியோ

viralvideo kachabadam cutegirldance
By Swetha Subash Mar 16, 2022 01:43 PM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

அங்கன் வாடி மையத்தில் பயிலும் சிறுமி ஒருவர் கச்சா பாதாம் பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அண்மையில் மேற்கு வங்க மாநிலம் பிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேர்கடலை விற்பனையாளர் புவன் பத்யாகர் தெரு தெருவாக சென்று கடலை விற்கும் போது அவர் பாடிய கச்சா பாதாம் பாடலை அவரது வாடிக்கையாளர் ஒருவர் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றினார்.

இதையடுத்து அந்த பாடல் இணையத்தில் வைரலானது. தற்போது அந்த பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து அவரை வைத்து கச்சா பாதாம் ஆல்பம் பாடல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில் அந்த பாடல் ஹிட் ஆனாது.

தற்போது அந்த பாடலுக்கு திரைப்பிரபலங்கள் முதல்,சிறுவர்கள் வரை சமூக வலைத்தளங்களில் நடனமாடும் வீடியோ நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் குஜராத்தைச் சேர்ந்த அங்கன்வாடி மையத்தில் பயின்று வரும் சிறுமி ஒன்று அழகான முக பாவனையுடன் அனைவருக்கும் மத்தியில் நடனமாடும் க்யூட் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.