இந்தியாவில் அமைதியாக வாழ தகுதியான நகரங்களின் பட்டியல்: சென்னைக்கு எத்தனையாவது இடம்?

india chennai cities
By Jon Mar 05, 2021 12:01 PM GMT
Report

இந்தியாவில் அமைதியாக வாழ்வதற்கு தகுந்த சூழ்நிலை உள்ள நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 111 நகரங்களை ஆய்வு செய்து ‘நகராட்சிகளின் செயல்திறன் குறியீடு-2020’ என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அந்நகரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம், பொருளாதார திறன், கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியலை நேற்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, வெளியிட்டார். இந்த 2 பிரிவுகளிலும் 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகமான நகரங்கள், குறைவான நகரங்கள் என தனித்தனியாக பிரித்து அவற்றில் சிறந்த தலா 10 நகரங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளன. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள்

பெங்களூரு புனே அகமதாபாத் சென்னை சூரத் நவி மும்பை கோவை வதோரா இந்தூர் மும்பை

10 லட்சம் மக்கள் தொகைக்கும் குறைவாக உள்ள நகரங்கள் சிம்லா புவனேஸ்வர் சில்வாசா காக்கிநாடா சேலம் வேலூர் காந்திநகர் குருகிராம் தவான்கீர் திருச்சி