இந்தியாவில் கருக்கலைப்புகள் அதிகம் செய்யும் மாநிலங்கள் எது தெரியுமா?அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் கருக்கலைப்புகள் அதிகம் செய்யும் மாநிலங்களின் பட்டியல் விவரம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்தியா
இந்தியாவில் கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து மாநிலங்களவையில் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆய்வு ஒன்றை நடத்தியது.அதில், 2015-16 ஆம் ஆண்டில் 47.8 சதவீதமாக இருந்த இந்த கருக்கலைப்புகள் , 2019-21ஆம் ஆண்டில் 56.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதன்படி, அதிகம் கருக்கலைப்பு செய்யும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இங்கு 1.8 லட்சம் கருக்கலைப்பு நிகழ்வுகள் நடந்துள்ளது.1.14 லட்சம் கருக்கலைப்பு நிகழ்வுகளுடன் 2 வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
கருக்கலைப்பு
மேற்கு வங்கம் 1.08 லட்சம் கருக்கலைப்பு நிகழ்வுகளுடன்3 வது இடத்திலும் உள்ளன.இந்த வரிசையில் அருணாச்சலப் பிரதேசம், சண்டிகர், உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பட்டியலில் கொடுக்கப்பட்ட எண்ணிக்கை எதிர்பாராமல் நிகழ்ந்த கருச்சிதைவு மற்றும் தானாக முன்வந்து செய்யப்பட்ட கருக்கலைப்பு இரண்டையும் உள்ளடக்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.