வரலாற்று சாதனை படைத்த கோலி - முத்தம் கொடுத்த மனைவி!

Sumathi
in கிரிக்கெட்Report this article
ஐபிஎல் தொடரில் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
விராட் கோலி
பெங்களூர் அணி, குஜராத் அணியை எதிர்கொண்டது. அதில், விராட் கோலி தனி ஆளாக நின்று போராடி 61 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். இதனால், ஆர் சி பி அணி 197 ரன்கள் எடுத்தது.
கோலி சதம் அடித்த உடன் அவருடைய மனைவி அனுஷ்கா ஷர்மா அங்கிருந்து பிளையிங் கிஸ் கொடுத்தார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஏற்கனவே கோலி படைத்திருக்கும் நிலையில்,
புதிய சாதனை
தற்போது ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதேபோன்று ஒரு சீசனில் 600 ரன்கள் மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் கெயில், வார்னர் ஆகியோரின் ரெக்கார்டை விராட் கோலி சமன் செய்துள்ளார்.
டேவிட் வார்னர், கெயில் ஆகியோர் மூன்று முறை 600 ஆண்டுகளுக்கு மேல் அடித்துள்ள நிலையில் விராட் கோலி தற்போது 2013, 2016, 2023 ஆம் ஆண்டு 600 ரன்கள் அடித்திருக்கிறார்.
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் விராட் கோலி பெற்றார்.