சென்னை அணியிலிருந்து கழட்டி விடப்படும் 4 வீரர்கள் - இதுதான் கடைசி ஐபிஎல்..!

MS Dhoni Chennai Super Kings TATA IPL IPL 2022
3 நாட்கள் முன்

நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து சென்னை அணி வெளியேறியுள்ள நிலையில் 4 வீரர்கள் அடுத்த சீசனில் விளையாட மாட்டார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய 2022 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்றுள்ளது. லக்னோ அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளதால் எஞ்சியுள்ள 2 இடங்களுக்கு 6 அணிகளுக்குள் போட்டி நிலவுகிறது.

சென்னை அணியிலிருந்து கழட்டி விடப்படும் 4  வீரர்கள் - இதுதான் கடைசி ஐபிஎல்..!

முன்னாள் சாம்பியன்களான சென்னை, மும்பை அணிகள் முதல் அணிகளாக தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இதில் சென்னை அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. நேற்று மும்பையுடன் நடந்த ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது. 

இதனிடையே ஐபிஎல் மெகா ஏலத்தில் கிறிஸ் ஜார்டனை ரூ.3.60 கோடி கொடுத்து சென்னை அணி வாங்கியது. ஆனால் நடப்பு சீசனில் 4 போட்டியில் விளையாடி அந்த அணி காலம் முழுவதும் பயப்படும் வகையில் சில சம்பவங்களை அவர் செய்துவிட்டார். வெறும் 2 விக்கெட்டை வீழ்த்திய ஜார்டன் 10க்கு மேல் எக்னாமியை வைத்துள்ளதால் நிச்சயம் அடுத்த தொடரில் விளையாட மாட்டார். 

டெல்லி அணியில் விளையாடிய தேஷ்பாண்டேவை சென்னை அணி ரூ.20 லட்சத்துக்கு வாங்கியது. முதலில் முகேஷ் சௌத்ரிக்கு முன்  தேஷ்பாண்டேக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் 2 போட்டியில் மட்டுமே விளையாடி 1 விக்கெட்டை மட்டுமே அவர் எடுத்தார். அதன் பிறகு தோனி தேஷ்பாண்டேக்கு வாய்ப்பு தரவில்லை. இதனால் அடுத்த சீசனில் தேஷ்பாண்டே கண்டிப்பாக சென்னை அணியில் இருக்க மாட்டார். 


நடப்பு சீசனில் 37 வயதான ராபின் உத்தப்பா 12 போட்டியில் விளையாடி 2 அரைசதம் உள்பட 230 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். மற்ற போட்டியில் சொதப்பியதால் மிடில் ஆர்டரில் சென்னை அணியின் பேட்டிங்கே கொஞ்சம் தடுமாறியது. இதனால் உத்தப்பா அடுத்த சீசனில் அணியில் இடம்பெறுவது சந்தேகம் தான். 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் பிரிட்டோரியஸ் சென்னை அணிக்கு வந்தார். முதல் போட்டியில் விளையாடிய பிறகு சில போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.பின்னர்  மீண்டும் அணிக்கு திரும்பினாலும் எதிர்பார்த்த ரிசல்டை அவர் தரவில்லை. 6 போட்டியில் விளையாடி 44 ரன்கள் மட்டுமே அடித்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனால் பிரிட்டோரியஸ் அடுத்த சீசனில் விளையாடுவது கடினம் தான். 

இந்த தகவலை கேட்ட சென்னை அணி ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.