ஒரு இந்தியர் கூட கிடையாது - எந்தெந்த நாடுகள் தெரியுமா?
ஒரு இந்தியர் கூட வசிக்காத சில நாடுகள் இருக்கின்றன.
இந்தியர்கள்
ஆசிய நாடுகளில் இருந்து ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா வரை எல்லா நாடுகளிலும் நாம் இந்தியர்களை காணலாம். ஆனால், ஒரு இந்தியர் கூட வாழாத நாடுகளும் இருக்கத் தான் செய்கிறது. அதுகுறித்து தெரியுமா?
அதில் ஒன்று வாடிகன் நகரம். இங்கு ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றும் மக்கள் வசிக்கின்றனர். மக்கள்தொகை மிகவும் குறைவு. ஒரு இந்தியர் கூட இங்கு வசிக்கவில்லை. சான் மரினோ ஒரு குடியரசு இங்கு, இந்தியர்கள் என்ற பெயரில் சுற்றுலாப் பயணிகளை மட்டுமே பார்க்க முடியும்.
எந்த நாடுகள்?
பல்கேரியாவில் இந்திய தூதரக அதிகாரிகளைத் தவிர, எந்த இந்தியரும் குடியேறவில்லை. உலகில் எல்லிஸ் தீவுகள் என்று அழைக்கப்படும் துவாலு. இந்த தீவில் 8 கிமீ நீள சாலைகள் மட்டுமே உள்ளன. அதனால் அங்கு இந்தியர்கள் வாழ சாத்தியமில்லை.
அண்டை நாடான பாகிஸ்தானில் நிலவும் பதற்றம் மற்றும் பொருளாதார அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தியர்கள் யாரும் இங்கு குடியேறவில்லை. தூதரக அதிகாரிகள் மற்றும் கைதிகளைத் தவிர, ஒரு இந்தியர் கூட இங்கு வசிக்கவில்லை.