விமான நிலையமே இல்லாத நாடு இருக்குனு சொன்னா நம்பமுடியுதா? எதெல்லாம் தெரியுமா!
விமான நிலையங்களே இல்லாத 5 நாடுகள் குறித்துப் பார்ப்போம்.
விமான நிலையம்
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத 5 நாடுகள் காணப்படுகின்றன.
வாடிகன் நகரம் உலகின் மிகச்சிறிய நாடு. வெறும் 0.44 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட வாட்டிக்கன் சிட்டியில், விமானம் தரையிறங்குவதற்கு அதிக இடமில்லாததால் இங்கு விமான நிலையம் இல்லை. இங்கே செல்ல விரும்புவோர் அதன் அயல் நாடுகளில் உள்ள விமான நிலையங்களைப் பயன்படுத்தி அந்நாட்டுக்கு செல்கின்றனர்.
சிறிய நாடுகள்
மொனாக்கோ உலகின் 2வது சிறிய நாடு. பிரான்சின் நைஸ் கோட் டி’அஸூர் விமான நிலையத்தில் தரையிறங்கி பிறகு ஒரு வண்டி மூலமாகவோ அல்லது படகு மூலமாகவோ செல்லலாம். உலகின் 5-வது சிறிய நாடு சான் மரினோ.
இத்தாலிக்கு சென்று அங்கிருந்தே சான் மரினோவிற்கு செல்ல வேண்டும். அன்டோரா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையே உள்ளது. பள்ளத்தாக்குகளிலிருந்து 3000 மீட்டர் தொலைவில் பல சிகரங்கள் இருப்பதால் விமானத்தை இயக்குவது கடினமானது.
சுவிட்சர்லாந்திற்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையில் நிலத்தால் சூழப்பட்டுள்ள சிறிய நாடு லிச்சென்ஸ்டீன். மலைப்பாங்கான நிலப்பரப்புகளின் காரணமாக இங்கு விமான நிலையம் இல்லம்.