உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியீடு:இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா?
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 139வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான உலக மகிழ்ச்சி அறிக்கையில் உலக அளவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
சுகாதாரம், கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் முறையே ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, சுவீடன், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தப்பட்டியலில் இந்தியா 139-வது இடத்தில் உள்ளது. இந்தப்பட்டியலில் கடைசி 3 இடங்களை ஜொர்டான், தான்சானியா மற்றும் ஜிம்பாவே ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.