சீர்காழியில் மதுபான கடையில் நூதன முறையில் திருட்டு- போலீசார் விசாரணை
சீர்காழி அருகே அரசு மதுபான கடையில் நூதன முறையில் உயர் ரக மதுபானங்கள் திருட்டு. போலீசார் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கினால் தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அரசின் அறிவிப்பினால் அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் இயங்கி வந்த அரசு மதுபான கடையில் பின்பக்க சுவரை துளையிட்ட மர்ம நபர்கள் அங்கு வைத்திருந்த உயர்ரக மது பானங்களை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அரசு மதுபான கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு மர்ம நபர்கள் வெளியில் நின்றவாறு நூதன முறையில் 61 உயர்ரக மதுபான பாட்டில்களை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.