புதுவையில் பரபரப்பு - சாராயக் கடைக்கு தண்ணீருக்குள் தனி ரூட்டு
புதுச்சேரியில் மது அருந்துவோரின் வசதிக்காக ஆற்றில் மிதவை விட்ட சம்பவம் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.
புதுச்சேரி மது அருந்தும் மதுபிரியர்களின் ராஜங்கம் என்றே கூறலாம் இந்த நிலையில், புதுச்சேரியில் மது அருந்திவோரின் வசதிக்காக ஆற்றில் மிதவை விட்ட சம்பவம் அரேங்கேறியுள்ளது புதுச்சேரியில் இருந்து 25 கி.மீ தொலைவில் தமிழகத்தின் எல்லையையொட்டி செட்டிப்பட்டு கிராமம் உள்ளது.
இங்கு சங்கராபரணி ஆற்றின் கரையோரம் மதுக்கடை அமைந்துள்ளது. இங்கு மதுபான விலை குறைவு தமிழக பகுதிகளில் இருந்து, அதிக எண்ணிக்கையில் மது குடிப்போர், சங்கராபரணி ஆற்றைக் கடந்து, செட்டிப்பட்டு மதுக்கடைக்கு வந்து, குடித்து விட்டு செல்வது வழக்கம்.
தற்போது சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் தமிழகப் பகுதியை சேர்ந்த மது குடிப்போர் சங்கராபரணி ஆற்றைக் கடந்து வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், விற்பனை பாதிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்களின் வசதிக்காக, மதுக்கடை உரிமையாளர் தனது சொந்த செலவில் மிதவை அமைத்துள்ளார்.
சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 50 மீட்டர் தொலைவுக்கு கரைகளின் இருபுறம் கயிறு கட்டி, அதன் மூலம் தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த மதுக்குடிப்போரை செட்டிப்பட்டு மதுக்கடைக்கு மிதவையில் அழைத்து வருகின்றார்.
அவர்கள் மது குடித்ததும் பின், அதே மிதவையில் திருப்பி அனுப்பிவைத்துள்ளார் இது குறித்து தகவல் அறிந்த கலால்துறை துணை ஆணையர் சுதாகர் தாசில்தார் சிலம்பரசன்,மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டு உரிமையாளரை கண்டித்தனர்.
இது போன்ற ஆபத்தான மிதவையை அகற்ற வேண்டும் என்றும் இனி இதுபோல் தவறு நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
மது அருந்துவோரின் வசதிக்காக ஆற்றில் மிதவை விட்டசம்பவம் புதுவையில் பேசுபொருளாக மாறியுள்ளது.