மதுபான வழக்கு: சிபிஐ அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்

Delhi Arvind Kejriwal
By Irumporai Apr 16, 2023 06:12 AM GMT
Report

டெல்லியில் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய மதுபானக்கொள்கை தொடர்பான முறைகேடு வழக்கில், ஏற்கனவே துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா சிறையில் உள்ளார்.

கெஜ்ரிவால் விசாரணை 

அவரை தொடர்ந்து இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்காக வரும் ஏப்ரல்-16 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு கடந்த வெள்ளிக்கிழமை சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. இதனையடுத்து, மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.

மதுபான வழக்கு: சிபிஐ அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர் | Liquor Case Arvind Kejriwal Appears In Cbi

சிபிஐ விசாரணை 

மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் வருகையையொட்டி ஆம் ஆத்மி கட்சியினர் ஏராளமான அங்கு திரண்டதால் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சாலை தடுப்புகளை கடந்து சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.