டெல்லியை உலுக்கிய மதுபானக் கொள்கை - துணை முதலமைச்சருக்கு சிபிஐ காவல்
முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசேடியாவுக்கு 2 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மதுபான முறைகேடு
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக ஆம் ஆத்மியை சேர்ந்த துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா சிபிஐயினரால் கைது செய்யப்பட்டார்.
சிபிஐ கைதினை தொடர்ந்து மணீஷ் சிசோடியா தனது பதவியினை ராஜினாமா செய்தார். பின்னர் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து, 5 நாள் நீதிமன்ற காவல் முடிந்து இன்று மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட உள்ளார்.
சிபிஐ விசாரணை
இந்த நிலையில், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மார்ச் 10ம் தேதி நடைபெறும் என்று டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் 5 நாள் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இரண்டு நாள் காவல்
மேலும், இது தொடர்பாக சிபிஐக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், 3 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ அனுமதி கேட்ட நிலையில், 2 நாள் காவலில் விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 5 நாள் காவலில் மணீஷ் சிசோடியா விசாரிக்கப்பட்ட நிலையில் மேலும் 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.