தலைமையாசிரியர் அறையில் ஆணுறைகள் : வசமாக சிக்கிய தனியார் பள்ளி
மத்தியப் பிரதேசத்தில் சோதனையின் போது தலைமையாசிரியர் அறையில் மது பாட்டில்கள் மற்றும் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாவட்ட கல்வி அதிகாரி ஏ.கே பதக் நேற்று நடத்திய திடீர் ஆய்வின் போது தலைமை ஆசிரியரின் அறைக்குள் மதுபாட்டில்கள், ஆணுறைகள் மற்றும் பிற சட்டவிரோத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பள்ளி சீல் வைக்கப்பட்டது.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் டாக்டர் நிவேதிதா சர்மா,பள்ளியின் முதல்வர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
மேலும்,வெளிநாட்டு மதுபாட்டில்களை வைத்திருந்த குற்றத்திற்காக,அந்த பள்ளியின் தலைமையாசிரியர் மீது காவல்த் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. குழந்தைகளுக்கு உதாரணமாக இருக்கும் பள்ளியில் ஆணுறை மற்றும் மதுபாடில்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.