திருமண மண்டபங்களில் இனி மது அருந்தலாம் - தமிழக அரசு அனுமதி
திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மதுபானம்
மது அருந்துவது என்பது பார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே அனுமதியுடன் இயங்கி வந்தது. பிற பொது இடங்களில் மதுபானங்களை குடிக்க தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழக் அரசு ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம்.
அனுமதி
ஒரு நாள் நிகழ்ச்சிக்கு கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம். மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம்.
பார் மற்றும் நட்சத்திர விடுதிகளில் இருந்த அனுமதி தற்போது கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும்,
சிறப்பு அனுமதிக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.