லிப் டூ லிப் கிஸ்... ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட புகைப்படம் - வெச்சு விளாசும் நெட்டிசன்கள்...!
தன் மகளுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த ஐஸ்வர்யாவின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மகளின் கையைப் பிடித்துச் சென்ற ஐஸ்வர்யா ராய்
சமீபத்தில், உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா தற்போது பிரான்ஸ் நாட்டில் நடந்தது. இந்த விழாவில் ஐஸ்வர்யா தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
இணையத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பட்சன் மற்றும் ஆராத்யாவுடன் இருக்கும் புகைப்படம் வைரலானது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக விமான நிலையத்தில் புறப்பட்ட குடும்பத்துடன் ஐஸ்வர்யா ராய் கிளம்பிய வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில், ஐஸ்வர்யா தன்னுடைய 11 வயதாகும் மகள் ஆராத்யாவின் கையை விடாமல் இறுக்கிப்பிடித்துக் கொண்டே இருந்தார். ஆராத்யா சுதந்திரமாக இருக்க முயல்கிறார். ஆனால், ஐஸ்வர்யோ ஆராத்யாவை விடுவதாக தெரியவில்லை.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள்... ஏன் இப்படி பண்றீங்க... ஆராத்யா வளர்ந்துவிட்டாள். இன்னும் அவரை ஏன் இப்படி இறுக்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவருடைய ஹேர் ஸ்டைல் கூட மாற்றாமல் இப்பவும் குழந்தைப்போலவே அவரை நடத்தி வருகிறார்கள் என்று சராமரியாக கேள்வி எழுப்பி வந்தனர்.
லிப் டூ லிப் முத்தம்
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சனுக்கு இன்று 11வது பிறந்தநாள். இதனையடுத்து, ஆராத்யாவிற்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறனர்.
இந்நிலையில், ஐஸ்வர்யா தன் மகளுக்கு அன்பு முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ஐஸ்வர்யா ராயை விளாசி வருகின்றனர்.
உங்கள் மகளுக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் பழக்கத்தை நிறுத்தவே மாட்டீர்களா? ஆராத்யாவின் ஹேர்ஸ்டைலை மாற்ற மாட்டீர்களா? தான் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டால் ஹேட்டர்ஸ் விளாசுவார்கள் என்று தெரிந்தே ஐஸ்வர்யா இப்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.