சர்வதேச கால்பந்து போட்டிகளில் மீண்டும் சாதனைப் படைத்த மெஸ்ஸி

Lionel Messi internationalfootballmatches
By Petchi Avudaiappan Sep 10, 2021 09:22 PM GMT
Report

 சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த தென் அமெரிக்க வீரர் என்ற சாதனையை படைத்து லயோனல் மெஸ்ஸி அசத்தியுள்ளார்.

பியூனஸ் அயர்ஸ் நகரில் நேற்று முன்தினம் உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில் அர்ஜென்டினா - பொலிவியா அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது.

இப்போட்டியில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல்கள் கணக்கில் பொலிவியா அணியைத் தோற்கடித்தது. இப்போட்டியில் அர்ஜென்டினா பெற்ற 3 கோல்களும் அந்த அணி வீரர் லயோனல் மெஸ்ஸி அடித்ததாகும்.

இதனையும் சேர்த்து சர்வதேசப் போட்டிகளில் அர்ஜென்டினாவுக்காக மெஸ்ஸி அடித்திருக்கும் கோல்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.