கால்பந்து போட்டியில் மாபெரும் சாதனை படைத்த மெஸ்ஸி.. - குவியும் வாழ்த்துக்கள்...!

Lionel Messi Football Viral Photos
By Nandhini Feb 27, 2023 08:24 AM GMT
Report

கால்பந்து போட்டியில் 700 கோல்களை அடித்து மாபெரும் சாதனை படைத்துள்ளார் மெஸ்ஸி.

சாம்பியன் பட்டம் கைப்பற்றிய அர்ஜென்டினா

கடந்த ஆண்டு இறுதியில் உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்தது.

பிபா சிறந்த கால்பந்து வீரர் விருது -

சமீபத்தில் சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிபா) சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருது வழங்கி வருகிறது. மாபெரும் சாதனை படைத்த மெஸ்ஸி கடந்த ஆண்டுக்கான பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டார்.

lionel-messi-reached-his-700th-club-goal-milestone

மாபெரும் சாதனை படைத்த மெஸ்ஸி

லயோனல் மெஸ்ஸி கிளப் கால்பந்து போட்டியில் 700 கோல்களை அடித்து மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

தனது நீண்ட கால போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் தற்போது இவர் இணைந்துள்ளார். சிறந்த கால்பந்து வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ 954 போட்டிகளில் 706 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.