மெஸ்ஸி கொலை மிரட்டல்... - கடையில் துப்பாக்கிச்சூடு நடத்தி மர்ம நபர்கள் எச்சரிக்கை..!

Lionel Messi Football Argentina
By Nandhini Mar 03, 2023 08:16 AM GMT
Report

நாங்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம் என்று நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடையில் துப்பாக்கிச்சூடு நடத்தி மெஸ்ஸிக்கு மிரட்டல்

அர்ஜென்டினாவின் சூப்பர் நட்சத்திர ஸ்டார் கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சிக்கு துப்பாக்கி ஏந்திய நபர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லயோனல் மெஸ்ஸியை அச்சுறுத்தும் முன், இந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் லயோனல் மெஸ்ஸியின் சொந்த ஊரான ரொசாரியோவில் உள்ள பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த சூப்பர் மார்க்கெட் மெஸ்ஸியின் மாமியாருக்கு சொந்தமானது. சூப்பர் மார்க்கெட்டில் மொத்தம் 14 சுற்று துப்பாக்கிச்சூட்டை மர்ம நபர்கள் நடத்தியுள்ளனர்.

நல்லவேளையாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால், கடை மிகவும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ஒரு குறிப்பை அங்கே விட்டுச் சென்றுள்ளனர். அதில் “மெஸ்ஸி நாங்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். ரொசாரியோவின் மேயர் ஒரு போதைப்பொருள் வியாபாரி, அவரால் உங்களைப் பாதுகாக்க முடியாது.” என எழுதப்பட்டிருக்கிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   

lionel-messi-gunmen-attack-supermarket