PSG க்ளப் அணிக்கு திரும்பிய ‘உலக சாம்பியன்' மெஸ்ஸிக்கு, வீரர்கள் உற்சாக வரவேற்பு!
கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி
FIFA உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான ஆட்டத்திற்குப் பிறகு லயோனல் மெஸ்ஸி தனது அணிக்கு வெற்றியைக் கொடுத்தார்.
அர்ஜென்டினா மக்கள் மட்டுமல்லாமல் உலக நாட்டு மெஸ்ஸியின் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். இதனையடுத்து, மெஸ்ஸியின் புகைப்படத்தை ரூபாய் நோட்டில் பதிவிட அந்நாடு பரிசீலனை செய்து வருகிறது.
சமீபத்தில் தனது குடும்பத்துடன் புத்தாண்டை மிக மகிழ்ச்சியாக கொண்டாடினார் மெஸ்ஸி. மேலும், 2022ம் ஆண்டை என் வாழ்க்கையில் மறக்க முடியாது என்று தெரிவித்தார்.
PSG க்ளப் அணிக்கு திரும்பிய மெஸ்ஸி
லயோனல் மெஸ்ஸி இந்த ஆண்டு துவகத்தில் ஜனவரியில் விளையாட உள்ளனர். இதற்காக மெஸ்ஸி PSG உடன் ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தற்போது, PSG க்ளப் அணிக்கு ‘உலக சாம்பியன்’ மெஸ்ஸி திரும்பியுள்ளார். மெஸ்ஸி வீரர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த மெஸ்ஸி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Lionel Messi given a heroes welcome on his return to PSG ???
— Football Daily (@footballdaily) January 4, 2023
? @PSG_inside pic.twitter.com/MOZLbXBGIp
World champion Lionel Messi returns to club PSG ?????
— Statman Diligent Ali ? (@alidiligent39) January 4, 2023
Welcome back Leo. pic.twitter.com/XQE4ZH1IEO