கால்பந்து உலகக் கோப்பையை வெல்ல இந்த 2 அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது - மெஸ்ஸி கணிப்பு

Lionel Messi
By Nandhini Oct 20, 2022 08:00 AM GMT
Report

வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ள கால்பந்து உலகக் கோப்பையை இந்த 2 அணிகள் வெல்ல வாய்ப்பு இருப்பதாக நட்சத்திர வீரரான மெஸ்ஸி கணித்துள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி -

2022 FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகின்றது. மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடப்பது இதுவே முதல்முறையாகும். வரும் நவம்பர் 20ம் தேதி தொடங்கவுள்ள இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி 28 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதில், மொத்தம் 64 போட்டிகள் நடைபெற உள்ளன. அதன் இறுதிப்பந்தயம் டிசம்பர் 18 அன்று நடைபெறும்.

பங்கேற்கும் நாடுகள் -

இந்த 22-வது ஃபிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்க கடந்த 4 ஆண்டுகளாக 210 அணிகள் முயற்சி செய்து வருகிறது. ஆனால் போட்டியை நடத்தும் கத்தார் உட்பட 32 அணிகள் மட்டுமே உலகக் கோப்பையில் பங்கேற்கும். இப்போட்டியில், ஆஸ்திரேலியா, கோஸ்டா ரிகா, வேல்ஸ் ஆகிய அணிகள் கடைசியாக இந்தப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கின்றன.

lionel-messi-food-ball

மெஸ்ஸி கணிப்பு -

இந்நிலையில் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் அல்லது பிரேசில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று அர்ஜென்டினாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி கணித்திருக்கிறார். இது குறித்து, மெஸ்ஸி பேசுகையில், பிரேசில் மற்றும் பிரான்ஸ் அணிகள் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளின் நோக்கமும் தெளிவாக இருக்கிறது என்றார்.