Viral Video : 35 பேருக்கு தங்க முலாம் பூசப்பட்ட ஐபோன்களை பரிசாக கொடுத்த மெஸ்ஸி...!

Lionel Messi Football Viral Video
By Nandhini Mar 02, 2023 12:27 PM GMT
Report

35 பேருக்கு தங்க முலாம் பூசப்பட்ட ஐபோன்களை சக வீரர்களுக்கு மெஸ்ஸி பரிசாக கொடுத்துள்ளார்.

சாம்பியன் பட்டம் கைப்பற்றிய அர்ஜென்டினா

கடந்த ஆண்டு இறுதியில் உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்தது.

மாபெரும் சாதனை படைத்த மெஸ்ஸி

சமீபத்தில் பாரிஸில் நடைபெற்ற விழாவில் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி 2022ம் ஆண்டின் சிறந்த FIFA ஆடவர் விருதை தட்டிச் சென்றார். இந்த விருதை மெஸ்ஸி 2-வது முறையாக வென்று அசத்தினார். கடந்த 2019ம் ஆண்டு FIFA ஆடவர் விருது மெஸ்ஸி வென்றது குறிப்பிடத்தக்கது.

lionel-messi-best-fifa-men-player-golden-i-phone

ஐபோன்களை பரிசாக அளித்த மெஸ்ஸி

பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியில் விளையாடிய வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 35 பேருக்கு, தங்க முலாம் பூசப்பட்ட ஐபோன் 14-களை பரிசாக மெஸ்ஸி வழங்கியுள்ளார்.

2022ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின்போது, மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, 36 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையை வென்றதன் நினைவாக வீரரின் பெயர், ஜெர்ஸி எண், அணியின் லோகோ ஆகியவை பொறிக்கப்பட்ட பரிசை அளித்துள்ளார்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.