FIFA ஆடவர் விருது... - மெஸ்ஸி 2வது முறையாக கைப்பற்றி மாபெரும் சாதனை... - குவியும் வாழ்த்து...!

Lionel Messi Football FIFA World Cup
By Nandhini Feb 28, 2023 08:04 AM GMT
Report

நேற்று பாரிஸில் நடைபெற்ற விழாவில் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி 2022ம் ஆண்டின் சிறந்த FIFA ஆடவர் விருதை தட்டிச் சென்றார்.

சாம்பியன் பட்டம் கைப்பற்றிய அர்ஜென்டினா

கடந்த ஆண்டு இறுதியில் உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்தது.

lionel-messi-best-fifa-men-player-award-2nd-time

மாபெரும் சாதனை படைத்த மெஸ்ஸி

நேற்று பாரிஸில் நடைபெற்ற விழாவில் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி 2022ம் ஆண்டின் சிறந்த FIFA ஆடவர் விருதை தட்டிச் சென்றார். இந்த விருதை மெஸ்ஸி 2-வது முறையாக வென்றுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு FIFA ஆடவர் விருது மெஸ்ஸி வென்றது குறிப்பிடத்தக்கது.

அர்ஜென்டினாவின் தலைமை பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி சிறந்த ஆடவர் பயிற்சியாளராகவும், எமிலியானோ மார்டினெஸ் சிறந்த ஆடவர் கோல்கீப்பர் விருதையும் வென்றனர். அர்ஜென்டினா ரசிகர்கள் ஃபிஃபாவின் சிறந்த ரசிகர் விருதை முதல்முறையாக வென்றனர்.

மெஸ்ஸி தனது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி வீரர் கைலியன் எம்பாப்பே மற்றும் ரியல் மாட்ரிட் கேப்டன் கரீம் பென்சிமா ஆகியோரை மிஞ்சி பாரிஸில் உள்ள சாலே ப்ளேயலில் புகழ்பெற்ற கோப்பையை வென்றார்.

2021ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2022ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ஆடவர் கால்பந்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக மெஸ்ஸி சிறந்த FIFA ஆடவர் வீரர் விருதை வென்றார்.

FIFA விருதுகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கியின் மகத்தான சாதனையை சமன் செய்து, PSG சூப்பர் ஸ்டார் 2வது முறையாக கோப்பையை வென்றார்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் மெஸ்ஸிக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.