ரூ.4000 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மெஸ்ஸி?
FC பார்சிலோனா கால்பந்து அணியில் 4 ஆண்டுகள் விளையாடுவதற்காக ரூ4,906 கோடியில் மெஸ்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக ஸ்பெயின் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு முதல் FC பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி விளையாடி வருகிறார், இதுவரையிலும் அணிக்காக 30க்கும் அதிகமான பட்டங்களை வென்று தந்துள்ளார். இந்நிலையில் 2017ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு சுமார் ரூ.4,906 கோடியில் விளையாட மெஸ்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக எல் முன்டோ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது, ஒரு சீசனுக்கான மெஸ்ஸியின் வருவாய் மட்டும் ரூ1,217 கோடியாகும், இத்தகவல் உண்மையாக இருப்பினும் விளையாட்டு உலகில் தனி வீரர் ஒப்பந்தம் செய்யப்பட்ட அதிகபட்ச மதிப்பு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.