மெஸ்ஸியை பார்த்ததும் குழந்தைப்போல் கதறி அழுத லயனல் ஸ்கலோனி... - நெஞ்சம் ரணமாக்கும் வீடியோ...!
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றவுடன் மைதானத்தில் லயனல் ஸ்கலோனி, மெஸ்ஸியை பார்த்ததும் குழந்தைப்போல் கதறி அழுதார்.
மெஸ்ஸியைப் பார்த்ததும் கதறி அழுத ஸ்கலோனி
கத்தார் கால்பந்து விளையாட்டு மைதானத்தில் சுமார் 90 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நேற்று ஆரவாரத்துடன், உற்சாகத்துடன் தொடங்கியது.
உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சம்பியன் பட்டத்தை பெற்றி வரலாறு சாதனைப் படைத்துள்ளது.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நேற்று நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா வெற்றி பெற்றவுடன், அர்ஜென்டினா அணித் தலைமைப் பயிற்றுவிப்பாளர் லயனல் ஸ்கலோனி மகிழ்ச்சியை அடக்கிக்கொண்டிருந்த தருவாயில், மெஸ்ஸி அவரை நோக்கி வந்தார். அப்போது, மெஸ்ஸியை பார்த்ததும் குழந்தைப் போல் கதறி அழுதார். அவர் கதறி அழுததைப் பார்த்த மெஸ்ஸி அவரை இறுக்கமாக கட்டியணைத்து ஆறுதல்படுத்தி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த உலக கால்பந்து ரசிகர்கள் நெஞ்சம் ரணமாகி வருகிறது. தற்போது அர்ஜென்டினா அணிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் சமூகவலைத்தளங்களில் குவிந்து வருகிறது.
Check out this video showing how Scaloni reacted to Argentina winning the shootout.
— Juan ?? (@socraticjuan) December 19, 2022
He could only hold it all in for so long.
What a man. pic.twitter.com/qAnGJD3q2i