EB எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் - தமிழக அரசு அரசிதழ் வெளியீடு
மின் நுகர்வோரின், ‘ஆதார்’ எண்ணுடன், மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசிதழ் வெளியீடு.
EB எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்
தமிழகத்தில் இலவச மின்சாரம், மானிய மின்சாரம் பெறும் நுகர்வோர்கள் தங்களின் ஆதார் எண்ணை மிக நுகர்வோர் எண்ணுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
மின் முறைகேட்டை தடுக்க ஆதார் எண் இணைக்கும் பணி துவங்கியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆதார் எண் இணைப்பதன் மூலம் மானிய மின்சாரம் முறைகேடாக செல்வதை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் நுகர்வோர் விவரமும் கடந்த ஆட்சியில் ஒரு கோடியே 15 லட்சம் தொலைபேசி எண்கள் மட்டுமே நுகர்வோரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
தற்போது மூன்று கோடி நுகர்வோர்களின் எண் நம்மிடம் உள்ளது என்றும் விரைவில் ஆதார் எண்ணை மிக நுகர்வோர் எண்ணுடன் இணைப்பதன் மூலம் மின் இழப்பீட்டை தடுக்க முடியும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.