LINKEDIN சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு - பயனர்கள் அதிர்ச்சி!
china
stopped
linked in
By Anupriyamkumaresan
மைக்ரோசாப்ட் நிறுவனம் சீனாவில் LINKEDIN சேவைகளை நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது. சீனாவில் இயங்கி வந்த மேற்கத்திய நாட்டினை சேர்ந்த ஒரே சமூகவலைதளம் லிங்கிடுஇன்.
2014ஆம் ஆண்டு சீனாவில் இந்த சேவைகளை வழங்க தொடங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம், சீனா அரசின் விதிமுறைகளை பின்பற்றி நடப்போம் எனக் கூறியது.

ஆனால் நாளுக்கு நாள் சீனா அரசின் விதிமுறைகள் கடுமையாவதால் , அங்கே சேவைகளை வழங்குவது சவால் நிறைந்ததாக உள்ளதென்றும் இனி லிங்கிடுஇன் சேவைகளை வழங்கப்போவதில்லை என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கு பதிலாக InJobs என்ற செயலியை அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்போவதாகவும் கூறியுள்ளது.