இனி 3 முறை மட்டுமே திமுகவில் மாவட்ட செயலாளர் பதவி - செயற்குழுவில் முக்கிய தீர்மானம்

DMK
By Karthikraja Aug 22, 2026 06:28 AM GMT
Report

dmk executive committee: திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு வயது மற்றும் 2 முறை மட்டுமே பதவி என முக்கிய மாற்றங்கள் செய்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக செயற்குழு கூட்டம்

2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு திமுகவின் முதல் செயற்குழு கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. 

இனி 3 முறை மட்டுமே திமுகவில் மாவட்ட செயலாளர் பதவி - செயற்குழுவில் முக்கிய தீர்மானம் | Limit For District Secretary In Dmk Executive Meet

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் எதிர்கால செயல்பாடுகள், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் அமைப்பு ரீதியாக மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் என்ற அடிப்படையில், மாவட்டச் செயலர்கள் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதே போல் திமுக மாவட்டச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திமுகவில் ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே இனி மாவட்டச் செயலாளராக பணியாற்ற முடியும்.

திமுக ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்களின் அதிகபட்ச வயது இனி 60 ஆகவும், மாநகர, பேரூர் வட்டச் செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 50 ஆகவும், கிளைச் செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 45 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.