கல்யாணமாகி விவாகரத்து வாங்குறது எனக்கு பிடிக்காது : வாழ்க்கை குறித்து திரிஷா பரபரப்பு பேட்டி
திருமணம் ஆன பிறகு விவாகரத்து பெற்றுக்கொள்வதில் தனக்கு உடன்பாடில்லை என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.
சினிமா துறையில் இருக்கும் தற்போதையை முன்னணி கதாநாயகிகளில் திரிஷாவும் ஒருவர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் எத்தனையோ வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
வெற்றி நடிகையாக திரிஷா
தற்போது வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். அதே சமயம் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு மனக்குறையாக உள்ளது.
திருமணம் எப்போது
ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கடைசி நேரத்தில் திருமணத்தை ரத்து செய்து விட்டார். தெலுங்கு நடிகர் ராணாவுடன் காதல் என பேசப்பட்டார். இந்த நிலையில் தற்போது திருமணம் குறித்து ஹைத்ராபாத்தில் திரிஷா அளித்துள்ள பேட்டியில்
நான் எதற்கு திருமணம் செய்து கொள்ளவில்லை என்று என்னை நிறைய பேர் கேட்கிறார்கள். எனக்கு அவர்கள் கேட்கும் விதம் சுத்தமாக பிடிக்கவில்லை.
சாதாரணமாக என்னிடம் எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று கேட்டால் மட்டுமே உங்களுக்கு பதில் கிடைக்கும் என கூறினார்.
விவாகரத்துகள் மீது நம்பிக்கை இல்லை
அதே சமயம் , எப்போது என்றால் எனக்கு கூட தெரியாது. அது முழுமையாக நான் யாரோடு இருக்கிறேன். யாரை எனக்கு பிடிக்கிறது என்பதை பொறுத்து இருக்கிறது. நான் வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்கக்கூடிய மனிதர் இவர் தான் என்று எனக்கு தோன்ற வேண்டும்.
எனக்கு விவாகரத்துகள் மீது நம்பிக்கை இல்லை. திருமணம் ஆன பிறகு விவாகரத்து பெற்றுக்கொள்வது எனக்கு வேண்டாம். என்னை சுற்றி இருக்கும் நிறைய பேர் திருமணமான பிறகு சந்தோஷம் இல்லாமல் உள்ளனர் , நான் அது போன்ற திருமணத்தில் இருக்க விரும்பவில்லை எனக் கூறினார்.