திருப்பரங்குன்றத்தில் தீபம்: இன்று யாருக்கும் அனுமதியில்லை

Tirupparankunram Murugan Temple
By Fathima Nov 28, 2026 08:51 AM GMT
Report

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என கோவில் நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ள ஓய்வு பெற்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது, இதற்கான வழிகாட்டுதல்களையும் நீதிமன்றம் வெளியிட்டது.

இதன்படி ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் இன்று மதுரை வந்தடைந்தனர்.


தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் தீபம் ஏற்றுவதற்கு தேவையான 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட மண்சட்டிகள், திரி மற்றும் நெய் உள்ளிட்ட பொருட்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நீதிபதிகள் தலைமையில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

தீபம் ஏற்றப்படும் போது யாருக்கெல்லாம் அனுமதி என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பார் என்றும், மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.  

இன்று யாருக்கும் அனுமதியில்லை

தீபத்தூண் பகுதியில் இன்று யாருக்கும் அனுமதி அளிக்கஇயலாது, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என சிஆர்பிஎப் அதிகாரி தெரிவித்துள்ளார்.