தமிழ்நாட்டில் இங்கெல்லாம் லிஃப்ட் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு!
TNGovt
Lift
By Irumporai
புதிதாக 2 அடுக்குகளுக்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களில் லிஃப்ட் வசதி கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இரண்டு அடுக்குகளுக்கு மேல் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் மின்தூக்கி உள்ளிட்ட வசதிகள் கட்டப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் லிஃப்ட், சாய்தள மேடை ,சிறப்பு கழிப்பறை கட்ட வேண்டும். லிஃப்ட் கட்டாயம் என நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வையற்றோருக்கான அறிவிப்பு பலகை, தனி வாகன நிறுத்தம் ஆகிய வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது