இந்த பிரச்சனை உங்களுக்கு இருக்கா ?முள்ளங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்!
முள்ளங்கியில் விட்டமின் பி, சி,கே, பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
முள்ளங்கி
அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் பல நல்ல சத்துகளைக் கொண்டவற்றில் முள்ளங்கியும் ஒன்று. முள்ளங்கியில் விட்டமின் பி, சி,கே, பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.குறிப்பாக முள்ளங்கி சாப்பிடுவதை யார் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முள்ளங்கி சாப்பிடுவதால் செரிமான மண்டலம் வலுவடைந்து உணவு நன்றாக ஜீரணமாகும்.மலக்குடலில் உள்ள கழிவை வெளியேற்றி, குடலைச் சுத்தம்செய்யும். முள்ளங்கியை அதிகமாகச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
யார் தவிர்க்க வேண்டும்?
மேலும் ரத்த அழுத்தம் குறைதல் பிரச்சனை உள்ளவர்கள் முள்ளங்கியை அதிகம் சாப்பிடக்கூடாது.உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், சர்க்கரை அளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லாமல் சமநிலையில் இருக்க வேண்டும்.
அத்தகைய சூழ்நிலையில், முள்ளங்கியைக் குறைவாக மட்டுமே சாப்பிடுங்கள்.நீங்கள் முள்ளங்கி சாப்பிட விரும்பினால், மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.