யாரெல்லாம் பப்பாளிய சாப்பிடக்கூடாதுன்னு தெரியுமா? மீறினால் உயிருக்கே ஆபத்தாம்!

papaya kidney stones vitamins fibre
By Nandhini Dec 30, 2021 09:44 AM GMT
Report

பொதுவாக பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்வார்கள். ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பழங்கள், சிலருக்கு மட்டும் சிக்கல்களையும் ஏற்படுத்தும்.

விலை மலிவாக கிடைக்கும் பப்பாளியில் சத்துக்கள் அதிகம். அது தரும் நன்மைகள் ஏராளம். ஆனால், சிலர் பப்பாளிப் பழத்தை சாப்பிடக்கூடாது. அந்தக் கட்டுப்பாட்டை கடைபிடிக்காவிட்டால் ஆரோக்கியமான பப்பாளி, உடலுக்கு தீங்கை விளைவித்து விடும். ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம் எனக்கூறப்படும் பொதுவாக பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பழங்கள், சிலருக்கு மட்டும் சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றன. விலை மலிவாக கிடைக்கும் பப்பாளி, சத்துக்களிலும், அது தரும் நன்மையிலும் மிகவும் மதிப்புமிக்கது.

ஆனால், சிலர் பப்பாளிப் பழத்தை சாப்பிடக்கூடாது என்ற கட்டுப்பாடும் இருக்கிறது. அந்தக் கட்டுப்பாட்டை கடைபிடிக்காவிட்டால் ஆரோக்கியமான பப்பாளி, உடலுக்கு தீமைகளையும் செய்துவிடும்.

யாரெல்லாம் பப்பாளியை சாப்பிடக்கூடாது என்று பார்ப்போம் -

கர்ப்பிணிகள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் பப்பாளி சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும. பப்பாளியில் இனிப்பு மற்றும் லேடெக்ஸ் இருக்கிறது. இது கருப்பையை சுருங்கச் செய்பவை. இதன் காரணமாக, பிரசவம் முன்கூட்டியே நடக்கும். இது தவிர, பப்பாளியை உட்கொள்வது கருவை பாதுகாக்கும் கருப்பையின் சவ்வை பலவீனப்படுத்தி விடும். அதிலும் குறிப்பாக, லேடெக்ஸ் சத்து பழுக்காத பப்பாளியில் இருப்பதால், பப்பாளியை காயாக சமைத்து சாப்பிடுவதை கர்ப்பிணிகள் தவிர்த்து விட வேண்டும்.

இதயத்துடிப்பு பிரச்சனை

இதயத் துடிப்பு பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள் பப்பாளியை சாப்பிடக்கூடாது. பப்பாளியில் சயனோஜெனிக் கிளைகோசைடு என்ற அமினோ அமிலம் இருக்கிறது. இது ஹைட்ரஜன் சயனைடை உற்பத்தி செய்யும். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவித்து விடும். ஏற்கெனவே ஒழுங்கற்ற இதயத் துடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு மிகவும் ஆபத்தை விளைவித்து விடும்.

தைராய்டு பிரச்சனை 

ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்களும் பப்பாளி சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

சிறுநீரகக் கற்கள்

வைட்டமின் சி பப்பாளியில் அதிக அளவில் காணப்படுகின்றன. இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகவும் இருக்கிறது. பப்பாளியை அதிக அளவில் உட்கொண்டால், அது சிறுநீரகத்தில் கற்களை (Kidney Stones) அதிகரித்து விடும். ஏற்கனவே இருக்கும் கல்லையும் கரைய விடாது. இது சிறு கற்கள் சிறுநீர் வழியாக கற்களை வெளியேற்றுவதற்கு முட்டுக்கட்டையாகி விடும். சரும அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்கள்

தோல் அலர்ஜி

தோல் அலர்ஜியால் அவதிப்படுபவர்கள், பப்பாளியை சாப்பிடவே கூடாது, ஏனென்றால், பப்பாளியில் சிட்டினேஸ் என்ற நொதி இருக்கிறது. இதனால், சரும அலர்ஜி உள்ளவர்களுக்கு தும்மல், சுவாசிப்பதில் சிரமம், இருமல், கண்களில் நீர் வடிதல் போன்றவை ஏற்படும். இது தோல் வெடிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்திவிடும்.

ரத்தக் கொதிப்பு

நோயாளிகள் ரத்தக் கொதிப்பு நோய்க்காக மருந்து சாப்பிடுபவர்கள் பப்பாளியை சாப்பிடக் கூடாது.   

யாரெல்லாம் பப்பாளிய சாப்பிடக்கூடாதுன்னு தெரியுமா? மீறினால் உயிருக்கே ஆபத்தாம்! | Lifestyle Health Vitamins Fibre Kidney Stones