குழந்தைகளின் ஐக்யூ லெவலை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்? 5 வயதிற்குள் கொடுத்தால் 100% அறிவாற்றல் பெருகும்!
பெரும்பாலும் அனைத்து பெற்றோர்களும் தனது குழந்தைகளுக்கு அறிவாற்றல் அதிகமாக இருக்க வேண்டும் என்பதையே கருத்தில் கொண்டிருப்பார்கள்.
அவர்களுக்கு என்ன உணவு அளித்தால் அறிவாற்றல் பெருகும் என்பதை குறித்து இதில் காண்போம் சிறு வயதில் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்ட குழந்தைகளின் ஐக்யூ நன்றாக இருக்கிறது என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஒரு குழந்தையின் மூளையானது 5 வயது வரை 90 % வரை வளர்ச்சி அடைகிறது. எனவே இந்த கால கட்டத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை வழங்க வேண்டும்.
முட்டை :
[
முட்டையில் இல்லாத ஊட்டச்சத்தே இல்லை என்று கூறலாம். இதில் கார்ப்ஸ், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் என நிறைய சத்துக்கள் காணப்படுகிறது. முட்டையில் உள்ள அதிகளவு புரோட்டீன் மற்றும் கோலின் போன்றவை குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
எண்ணெய் மீன்கள் :
[
எண்ணெய் மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை வளர்ச்சிக்கு பெருமளவில் உதவுகிறது. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் செல்லின் கட்டுமானத் தொகுதிகளில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
ஓட்ஸ் :
[
ஓட்ஸ் மூளைக்கு சிறந்த ஆற்றலை கொடுக்கும் உணவாகும். இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். இதில்ளவைட்டமின்கள் ஈ, பி காம்ப்ளக்ஸ் மற்றும் துத்தநாகம் ஆகியவை காணப்படுகிறது. இந்த சத்துக்கள் மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது.
காய்கறிகள் :
காய்கறிகளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இவை மூளை செல்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. தக்காளி, பீன்ஸ், சர்க்கரை வள்ளிக்க்கிழங்கு, பூசணி, கேரட், கீரை ஆகிய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.